கல்லூர் ரயில்வே ஸ்டேஷன்
புத்தருக்கு ஞானோதயம் ஒரு போதி மரத்தின் அடியில் தான் கிடைத்தது என்பது வரலாறு.எனக்கு கிடைத்தது ரயில்வே ஸ்டேஷன். இயக்குனர் சரணின் ஒவ்வொரு படத்திலும் ஒரு back drop இருக்கும் .காதல் மன்னன் படத்தில் ஒரு mansion ,அமர்க்களம் படத்தில் ஒரு தியேட்டர் .அல்லி அர்ஜுனாவில் ஒரு பழைய போலீஸ் ஸ்டேஷன்.அது மாதிரி எனது வாழ்க்கையில் backdrop மேலகல்லூர் ரயில்வே ஸ்டேஷன் தான்.
ரயிலை விட்டு இறங்கியதும் முதல் வீடு எங்கள் வீடுதான். சிறு வயது முதல் எல்லா ரயிலையும் வேடிக்கை பார்க்க ஸ்டேஷன் க்கு போய்விடுவேன்.திருநெல்வேலி யிலுருந்து செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில்தான் இந்த ஸ்டேஷன் உள்ளது.நானும் எனது நண்பர்களும் ட்ரெயின் வருவதற்கு முதல் மணி (பிளாக் ஆயிருச்சு என்று சொல்வார்கள் )அடித்தவுடனே ஸ்டேஷன் ல் இருப்போம்.ட்ரெயின் கடந்து கண்ணை விட்டு மறைந்தபின் தான் வீடு திரும்புவோம்.
அந்த ஸ்டேஷன் ல் வேலை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர்,gate keeper ,சிக்னல் man ,gang man அனைவரும் நல்ல அறிமுகம்.ரயிலில் டிரைவர் ஆகவோ அல்லது guard ஆகவோ ஆகவேண்டும் என்ற இலட்சியம் எல்லாம் இருந்தது.அங்கு வேலை பார்ப்பவர்களின் அன்றாட பணிகளை கூர்ந்து கவனிப்பேன்.ஒரு ரயில் வருவதென்றால் மாஸ்டர் அடுத்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் போனில் என்ன பேசுகிறார்.சிக்னல் man க்கு கொடுக்கும் கட்டளை ,அதற்குரிய machine ல் token எடுப்பது அதை வளையத்தில் மாட்டுவது அனைத்தும் அத்துப்படி.
பிளஸ் one முதல் நண்பர்கள் வெங்கிடு,கணேசன் ,விசு,செந்தில் ,கணக்கன் மாரி,வீரமணி ,ஈஸ்வரன் ,ஐயப்பன் அண்ணன் ஆகியோருடன் சேர்ந்து படிப்பது ஸ்டேஷன் ல் தான் ,நண்பர்களுடன் அரசியல்,இலக்கியம் ,சினிமா என்று எல்லா விஷயங்களையும் விவாதிப்போம்.நாங்கள் மட்டும் அல்ல.. எங்களுக்கு வயதில் மூத்தோரும் உட்கார்ந்து பேசுவார்கள்.நிறைய விஷயங்கள்...அனுபவங்கள்...
வீதியில் ராஜாவையும் அவரது அரண்மனையும் வேடிக்கை பார்த்தவனுக்கு எதிர்பாராதவிதமாக அரண்மனையும், ராஜாவின் பதவியும் கிடைத்த மாதிரி எங்கள் வாழ்விலும் திடீரென்று ஒரு நாள் நடந்தது..இப்போது சில நண்பர்களிடம் சொன்னால் கூட ..டேய் கதை விடாதே ... என்பார்கள்.
ஸ்டேஷன் ல் வருமானம் இல்லை என்று தனியாரிடம் ஒப்படைக்க (privatisation ) ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.எங்கள் ஊரை சேர்ந்த வருக்கே அந்த contract கிடைத்தது.அவர் முழு நேர விவசாயி.ஊர்ல படிக்கின்ற பசங்க ஸ்டேஷன் ஐ நல்ல கவனிப்பாங்க..அவங்களுக்கும் படிக்க இடமும் கொடுத்தமாதிரியும் இருக்கும் .. என்று எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்...அப்புறம் என்ன..ஸ்டேஷன் ல் டிக்கெட் கொடுப்பதில் இருந்து ரயிலுக்கு கொடி காட்டுவது வரை எங்கள் வேலைதான்...
![]() |
கைலி கட்டிட்டு ரயிலுக்கு கொடி காட்டுவதை எங்காவது பாத்திருக்கேளா ?..பக்கத்தில் நிற்ப்பது என் தம்பி ராசு என்ற குட்டி |
![]() |
கணக்கன் மாரிக்கு டிக்கெட் கொடுக்கிறேன் |
![]() |
அன்று |
![]() |
இன்று |
![]() |
இன்று....டிக்கெட் கவுன்ட்டர் |
![]() |
முள்ளும் செடியும் மண்டி பொலிவிழந்த நிலையில் |