Wednesday, September 21, 2011

பார்த்ததில் ரசித்தது

     THE    ROAD  HOME 

            கடந்த வாரம் மதுரை புத்தக திருவிழாவிற்கு சென்ற போது சில வருடங்களாக தேடி கிடைக்காத உலக சினிமாக்களின் பட்டியலில் உள்ள படங்களின் DVD   சிலவற்றை  வாங்கிவந்தேன்.
                        
                           தி ரோடு ஹோம்-- zhang  yimou  இயக்கி 1999 ல் வெளிவந்த சீன மொழி திரைப்படம்.தந்தையின் மரண செய்தி கேட்டு சொந்த கிராமத்திற்கு செல்லும் மகன் சொல்லுவதாக துவங்குகிறது.தனது பெற்றோரின் கண்ணியமான காதலையும்,அவர்களின் வாலிப பருவத்தையும் மகன் மூலமாக நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர்.
                             
                         கம்யூனிச நாடான  சீனாவில் உள்ள பள்ளிக்கூடமே இல்லாத ஒரு கிராமத்தில் கிராமத்தினரே பள்ளியை கட்டி ,புதிய ஆசிரியராக shangyu  வை அழைத்து வருகின்றனர்.அக்கிராமத்தை சேர்ந்த shavo  என்ற இளம்பெண்  ஆசிரியரை பார்த்த முதல் பார்வையிலே காதல் வயப்படுகிறாள்.அந்த ஊருக்குள் வரும் அந்த மலைப்பாதையின்   காலை  வேளையின்  பசுமையையும்  ,மாலைநேர மஞ்சள் வெயில் படர்ந்த அழகையும்,பனிபெய்யும் போது  உள்ள குளுமையும் ,அதனால்   கருகும் செடி  கொடிகளையும் அவளது காதலில் ஏற்படும் மகிழ்ச்சி,ஏமாற்றம் ,துக்கம் போன்ற அனைத்து உணர்ச்சிகுவியலுக்கும் பின்னணியாக  காண்பிப்பதை பார்க்கும்போது நாம் முழுமையாக திரைப்படத்தில் ஆழ்ந்து விடுகிறோம்
                                                 .
                                 படத்தில் சில காட்சிகளை சேரனின் தவமாய் தவமிருந்து படத்திலும் மற்றும் சசியின் 'பூ ' படத்திலும் பார்த்திருக்கலாம்.காட்சிகள் சுடப்பட்டன  என்பதைவிட inspiration ல் தழுவப்பட்டது என நாகரிகமாக எடுத்துகொள்ளலாம்.
         நினைவுகள் என்றென்றும் பசுமையானது என்பதை குறிக்கும் விதமாக flashback  காட்சிகள் வண்ணத்திலும்,நிகழ்காலம் கருப்பு வெள்ளையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
          படத்தின் முக்கிய செய்திக்கு வருவோம்.இறந்த தந்தையின் உடல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையிலிரிந்து கிராமத்தில் உள்ள மயானத்திற்கு வாகனத்தின் மூலம் கொண்டு வரலாம் என்ற உறவினர்களின் யோசனையை வயதான தாய் மறுக்கிறாள்.கிராமத்திற்கு வரும் அந்த மலைப்பாதை எங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சம்.இறந்த தனது கணவரை அந்த வழியில் தூக்கிக்கொண்டு வரும் போதுதான் அவருக்கு அந்த நினைவுகள் மறக்காமல் இருக்கும்.இறுதி அஞ்சலியாக இருக்க முடியும் என்று வாதம் செய்கிறாள்.உறவினர்களோ , இளைஞர்கள் எல்லோரும் வேலை தேடி வெளியூர் சென்று விட்டனர்.கிராமத்தில் தற்போது முதியோரும்,பெண்களும் ,குழந்தைகளும் மட்டுமே உள்ளனர்.   தூக்கி வருவது  தற்போது உள்ள சூழ்நிலையில்  சாத்தியமில்லை என விவாதிக்கின்றனர்.அதற்க்கான தீர்வை மகன் செய்வதாக திரைப்படம்  தெரிவிக்கிறது.

                 சிறுவயதில் எங்கள்  பகுதியில் இறப்பவர்களை தாமிரபரணி கரையில்   உள்ள மயானத்திற்கு  பாடையில் தூக்கி செல்வர்.தூக்கி செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அந்த கால இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.தூக்கிசெல்லும்போது இவர்களது பாவங்கள் இறந்தவரோடு போய்விடும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
        கடந்த மாதம் ஊருக்கு செல்லும் போது அந்த கால இளைஞர்களில் ஒருவரான     ஐயம் பெருமாள் கோனார் மகன் சங்கரலிங்கம் அண்ணனை சந்தித்தேன். தற்போது பக்கவாதம் வந்து என்னிடம்  கையை ஆட்டி ஏதோ  பேச முயல்கிறார்.தனது இயலாமையை லேசான கண்ணீருடன் வெளிப்படுத்துகிறார் .எனக்கு புரியவில்லை என்றாலும் ,அந்த காலத்தில்  கோடகநல்லூர் செல்லும் பாதையில்      பாடையின் ஒரு கம்பை கம்பீரமாக சுமந்துகொண்டு நடந்து சென்றதுதான் எனக்கு நினைவு வந்தது.
கோடகநல்லூர் சாலை 
                                 
                1996  ல் சேரன்மகாதேவியில் எனது ஆச்சி இறந்தபோது  பாடையை நானும்  ,தம்பி கண்ணன்,எனது நண்பர்கள்  இசக்கிபாண்டி,கிருஷ்ணமூர்த்தி யோடு   தூக்கிகொண்டு சென்றபோது அந்த அனுபவத்தை வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை உணர்ந்து இருக்கிறேன்.
                                    தற்போதுள்ள  நாகரிக சூழலில் ,கிராமத்தில் கூட இறந்தவர்களை    தூக்கி செல்லும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.மாற்றாக தேர் ஒன்று செய்து கயிறு கட்டி இழுத்து செல்வதோ அல்லது   தள்ளிக்கொண்டு செல்வது மாதிரி ஏற்படுத்தி விட்டனர். எல்லா சாதியினரையும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் தூக்கி கொண்டு சென்ற கல்லூரில் , இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகம் வசிக்கும் ஒரு சாதியினர் அவர்கள் சமுதாயத்திற்கென்று தனியாக தேர் ஒன்று செய்து விட்டனர்.இதனால் மற்ற  சமுதாயத்தினர் ஒன்று கூடி பொதுவாக ஒரு தேர் ஒன்று செய்ய வேண்டும் என்று முடிவு செய்து , எட்டு பேர் மட்டும்  செலவை ஏற்க்க வேண்டும் என்று முடிவு செய்து  அதில் ஒருவராக என்னை அழைத்ததை மிகப்பெரிய பேறாக நினைத்து எனது பங்கு தொகையை வழங்கியது எனக்கு பெரிய மன நிம்மதியை  அளித்தது.                                     
                     தற்போது அருப்புகோட்டையில் சொந்த வீடு கட்டி குடியிருப்பதால்  தெரிந்தவர்கள்   என்ன   அருப்புகோட்டையிலே  settle  ஆகி விட்டீர்களா என்று கேட்பார்கள்?.அதை மறுத்து  "சங்கு ஊதுவதற்கு எங்க ஊருக்கு போய்விடுவேன் " என்று வேடிக்கையாக சொல்வேன்.... ....எங்கள் ஊர் வருங்கால இளைஞர்களை எதிர்பார்க்காமல் எனக்கென்று ஒரு வாகனம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் .........            

Monday, July 4, 2011

RAILWAY STATION

கல்லூர்   ரயில்வே  ஸ்டேஷன் 


                                 புத்தருக்கு ஞானோதயம்  ஒரு போதி மரத்தின் அடியில் தான் கிடைத்தது என்பது வரலாறு.எனக்கு கிடைத்தது ரயில்வே ஸ்டேஷன். இயக்குனர்  சரணின்  ஒவ்வொரு படத்திலும் ஒரு back drop  இருக்கும் .காதல் மன்னன் படத்தில் ஒரு mansion ,அமர்க்களம் படத்தில் ஒரு தியேட்டர் .அல்லி அர்ஜுனாவில் ஒரு பழைய போலீஸ் ஸ்டேஷன்.அது மாதிரி எனது வாழ்க்கையில் backdrop மேலகல்லூர் ரயில்வே ஸ்டேஷன் தான்.
      
                         ரயிலை விட்டு இறங்கியதும் முதல் வீடு எங்கள் வீடுதான். சிறு வயது முதல் எல்லா ரயிலையும் வேடிக்கை பார்க்க ஸ்டேஷன் க்கு  போய்விடுவேன்.திருநெல்வேலி யிலுருந்து செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில்தான் இந்த ஸ்டேஷன் உள்ளது.நானும் எனது நண்பர்களும் ட்ரெயின் வருவதற்கு முதல் மணி (பிளாக் ஆயிருச்சு என்று சொல்வார்கள் )அடித்தவுடனே ஸ்டேஷன் ல் இருப்போம்.ட்ரெயின் கடந்து கண்ணை விட்டு மறைந்தபின் தான் வீடு திரும்புவோம்.
       அந்த ஸ்டேஷன் ல் வேலை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர்,gate keeper ,சிக்னல் man ,gang  man  அனைவரும் நல்ல அறிமுகம்.ரயிலில் டிரைவர் ஆகவோ அல்லது  guard  ஆகவோ ஆகவேண்டும் என்ற இலட்சியம் எல்லாம் இருந்தது.அங்கு வேலை பார்ப்பவர்களின் அன்றாட பணிகளை கூர்ந்து கவனிப்பேன்.ஒரு ரயில் வருவதென்றால்  மாஸ்டர் அடுத்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் போனில் என்ன பேசுகிறார்.சிக்னல் man க்கு  கொடுக்கும் கட்டளை ,அதற்குரிய machine ல் token எடுப்பது    அதை வளையத்தில் மாட்டுவது அனைத்தும் அத்துப்படி.
                        பிளஸ் one   முதல்   நண்பர்கள்  வெங்கிடு,கணேசன் ,விசு,செந்தில் ,கணக்கன் மாரி,வீரமணி ,ஈஸ்வரன் ,ஐயப்பன் அண்ணன்  ஆகியோருடன்    சேர்ந்து படிப்பது  ஸ்டேஷன் ல் தான் ,நண்பர்களுடன் அரசியல்,இலக்கியம் ,சினிமா என்று எல்லா விஷயங்களையும் விவாதிப்போம்.நாங்கள் மட்டும் அல்ல..  எங்களுக்கு வயதில் மூத்தோரும் உட்கார்ந்து பேசுவார்கள்.நிறைய விஷயங்கள்...அனுபவங்கள்...
                 வீதியில் ராஜாவையும் அவரது அரண்மனையும் வேடிக்கை பார்த்தவனுக்கு  எதிர்பாராதவிதமாக அரண்மனையும், ராஜாவின் பதவியும் கிடைத்த மாதிரி  எங்கள் வாழ்விலும்  திடீரென்று ஒரு நாள் நடந்தது..இப்போது சில நண்பர்களிடம் சொன்னால் கூட ..டேய்  கதை விடாதே ... என்பார்கள்.
            ஸ்டேஷன் ல் வருமானம்  இல்லை என்று தனியாரிடம் ஒப்படைக்க (privatisation ) ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.எங்கள் ஊரை சேர்ந்த வருக்கே அந்த contract  கிடைத்தது.அவர் முழு நேர விவசாயி.ஊர்ல படிக்கின்ற  பசங்க ஸ்டேஷன் ஐ நல்ல கவனிப்பாங்க..அவங்களுக்கும் படிக்க இடமும் கொடுத்தமாதிரியும் இருக்கும் .. என்று எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்...அப்புறம் என்ன..ஸ்டேஷன் ல் டிக்கெட் கொடுப்பதில் இருந்து  ரயிலுக்கு கொடி காட்டுவது வரை எங்கள் வேலைதான்...
கைலி கட்டிட்டு ரயிலுக்கு கொடி காட்டுவதை எங்காவது பாத்திருக்கேளா ?..பக்கத்தில்  நிற்ப்பது என் தம்பி ராசு என்ற குட்டி
 கணக்கன் மாரிக்கு   டிக்கெட் கொடுக்கிறேன்
                                                                                                                                                                                      முழு நேரமும் சுதந்திரமாக படிப்பது....தூங்குவது..பேசுவது எல்லாம் ஸ்டேஷன் ல் தான். சாப்பிட மட்டும் தான் வீடு.எங்கள் கல்லூரி நண்பர்கள் யார் ஊருக்கு  வந்தாலும் ரெண்டு நாளாவது  ஸ்டேஷன் ல் தங்கிவிட்டுத்தான் செல்வார்கள்.பர பரவென்று அடிக்கும் காற்றுக்கு அப்படி ஒரு தூக்கம் வரும்.எனது கல்லூரி நண்பர்கள் முத்துகுமரன்,முருகேசன், செல்வா,அண்ணா,குழந்தை,bond ,செந்தில் ,சிலோன் மகேந்திரன்,பார்த்தா,ரமணி,பாண்டியராஜ் ,ராமர்  மற்றும் அருப்புகோட்டை நண்பர்களும்  ஸ்டேஷன் ல் தங்கி புதிய அனுபவம் பெற்றதுண்டு. ..                         
அன்று

இன்று
                                                                                                                                                                 1984  முதல் 1994  வரை எங்கள் வசம் இருந்தது. அதன் பின் ஸ்டேஷன் மூடப்பட்டுவிட்டது.கல்லூரில் ரயிலும் நிற்காது.                                                      
இன்று....டிக்கெட் கவுன்ட்டர்


முள்ளும் செடியும் மண்டி பொலிவிழந்த நிலையில்
                                                                                                                                               தற்போது  Broadgauge  conversion  நடக்கிறது. ஸ்டேஷன் பாழடைந்து போய் கிடக்கிறது.இப்போது ஊருக்கு செல்லும் போது நண்பர்களுடன் சென்று பார்ப்பேன்.மனசு ரொம்ப கனக்கும்..கண்ணில் நீர் திரையிடும் ...

Monday, February 28, 2011

ராமேஸ்வரம் கணேசன்

இந்த குட்டையில் கல்லை தூக்கி போட்டவர்கள் 2 --ராமேஸ்வரம் கணேசன்
                                  
பக்திமான் கணேசன் .... பரவசத்தை பாருங்க
                                          

                        நட்புக்கு வயது தேவை இல்லை.என்னைவிட 15 வயது மூத்தவர். எனது அருப்புகோட்டை நண்பர்கள் குழுவில்  பெரியவர். இருபது வயது வித்தியாசமான நண்பர்களுடன் சரி சமமாக அரட்டை முதல் அனைத்து செயல்களுக்கும்  ஈடு கொடுத்து கலகலப்பாக கிண்டல் அடித்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு பிள்ளை. குஷி பேர்வழி .
          அருப்புகோட்டை LIC  யில் இருவரும் ஒரே நாளில் சேர்ந்தோம்.ஒரே அறையில் தங்கினோம். நான்கு  வருடம் கழித்து ஒரே நாளில் காலி செய்தோம்.ஒரே நாளில் பைக் வாங்கினோம் .எட்டு வருடம் கழித்து  ஒன்றாக ஒரே நாளில் கார் வாங்கினோம்...எத்தனை ஒற்றுமை. 
     வளர்ச்சி அதிகாரி வேலையில் கண்ணை கட்டி காட்டில்  விட்டது போல் தெரியாத ஊரில் மாட்டிகொண்டபோது என்னை கையை பிடித்து கூட்டிகொண்டு  சென்று பணியை பற்றி குழந்தைக்கு சொல்லிகொடுப்பதுபோல் அறிவுரை கூறி பணிக்கான இலக்கை நோக்கி அழைத்துசென்று பணி நிரந்தரம் பெற உதவிகள் செய்தார்.நான்கு வருட mansion  வாழ்க்கை....எவ்வளவு அற்புதமான காலம்...
    ஊரில் ஒரு தியேட்டரில் படம் மாத்திரகூடாது. ..அன்னைகே நைட் ஷோ செல்வோம்.மொக்கை படத்தையும் விடாமல் பார்த்துவிட்டு  அடிப்பார்பாருங்க ஒரு கமெண்ட். ...இவனுன்ங்க படத்தை எடுத்துவிட்டு  ரிலீஸ் பண்ணுறதுக்கு முந்தி ஒரு தடவை போட்டு பாக்க மாட்டாங்களா.
தாதா கணேசன் ...பந்தாவை பாருங்க
                              
   எத்தனை  ஊர்களுக்கு சுற்றியிருக்கிறோம் ...எவ்வளவு பேசியிருக்கிறோம் ..
1995 க்கு பிறகு இட மாறுதல் பெற்று ராமேஸ்வரம் சென்று விட்டாலும்  இன்றும் நினைத்தவுடன் போனில் பேச்சும் அடிக்கடி சந்திப்பும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
    எழுதுவதற்கு நிறைய இருக்கிறது....மீண்டும் நிறைய பதிவுகளில் இவரை பற்றி எழுதவேண்டியுள்ளது. 
  இன்றைக்கு பதிவு வெளியிட வேண்டிய அவசியம் ..எது ?
          இன்றைக்கு இவரது பணியிலிருந்து ஒய்வு பெறும் நாள்.......நண்பர்கள் அனைவரும்  ராமேஸ்வரத்தில் சங்கமிக்கிறோம்...எங்களது நட்புக்கு ஒய்வு இல்லை.
        28.2.2011  .         

                                                                                                                        

Sunday, February 27, 2011

கணேசன்

இந்த  குட்டையில் கல்லை தூக்கி போட்டவர்கள் 1---கணேசன்  


                          என்ன தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்ற தலைப்பை நாந்தான் வைத்திருந்தேன். கவிபேரரசு முந்திக்கொண்டு பதிவு செய்துவிட்டார்.
          44  வருட வாழ்க்கையில் எத்தனையோ நண்பர்கள் .ஆனால் முதல் நட்பு எங்கே ஆரம்பித்தது.?.எல்லா காரியத்தையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது மாதிரி  எனது முதல் நண்பன் ஆறுமுகம் பிள்ளை கணேசன் என்ற  A .கணேசன். அவனது நோட்டு புத்தகத்தில்  அவனது பெயரை எப்படி எழுதியிருப்பான் ...அவனது கையெழுத்து இன்னும் மனதில்  அப்படியே ஞாபகம் இருக்கிறது.
                சேரன்மகாதேவியில் எனது தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போது என்னை ஈர்த்தவன் .என்னை சேரன்மகாதேவிக்கு  படிக்க வா என்று அழைப்பு விடுத்து எனக்குள் சில மாற்றத்தையும்,சில திறமைகளையும் உருவாக்கியவன்.என்னை விட இரண்டு வகுப்பு சீனியர். +2  பாடத்திட்டத்தில் முதல் batch .
* சேரை நூலகத்திற்கு அழைத்து சென்று புத்தகங்களை படிக்கவைத்தது.
*அவனது பாடங்களில் உள்ள விஷயங்களை விவரித்து என்னை வியக்க வைத்தது. 
*சிறுவயதில் கபடி ,நீச்சல்  போன்ற அடிப்படை விளையாட்டுகளை அறிமுகபடுத்தியது.
*வைத்யனதசாமி கோயிலில் கதகலட்ஷேபம் ,கச்சேரி ,அரசியல் கட்சி கூட்டங்கள் போன்றவற்றிற்கு அழைத்து சென்று கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது.
           சேரை வைத்யனாதசாமி  கோயில் தெருவில் கண்ணன்,ஞானவேல்,கனகரெங்கண் என்ற ரவி,உலகநாதன்,சங்கர் ,சங்கரலிங்கம், பக்கிர்  போன்ற பெரிய நண்பர் குழுவையே ஒருங்கிணைத்து பெரிய நண்பர் வட்டாரத்தில் என்னையும் இணைத்தவன்.
   B sc .(maths ) ம.தி.தா இந்து கல்லூரியில் படித்தான்.படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதற்குள் காதல் திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.2003 ல் அதே தெருவில் சந்தித்தேன்.   தாழையூத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் இருப்பதாக சொன்னான்.எனது மனைவியிடம் எனது முதல் நண்பன் என்று அறிமுகப்படுத்தினேன்.
        நிர்வாகம் (management ) பற்றிய கல்வியில் synergy  என்ற சொல் உண்டு.அதாவது  ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு கிடையாது.இரண்டுக்கு மேலோ அல்லது கீழோ தான் இருக்கும்.அதுபோல நண்பனுடன் பழகும்போது அவனை உருவாக்கவேண்டும் ;அல்லது அவனை அழிக்கவேண்டும்.இல்லையேல் அதுவெறும் ரயில் சிநேகிதம்  மட்டுமே.