Monday, February 28, 2011

ராமேஸ்வரம் கணேசன்

இந்த குட்டையில் கல்லை தூக்கி போட்டவர்கள் 2 --ராமேஸ்வரம் கணேசன்
                                  
பக்திமான் கணேசன் .... பரவசத்தை பாருங்க
                                          

                        நட்புக்கு வயது தேவை இல்லை.என்னைவிட 15 வயது மூத்தவர். எனது அருப்புகோட்டை நண்பர்கள் குழுவில்  பெரியவர். இருபது வயது வித்தியாசமான நண்பர்களுடன் சரி சமமாக அரட்டை முதல் அனைத்து செயல்களுக்கும்  ஈடு கொடுத்து கலகலப்பாக கிண்டல் அடித்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு பிள்ளை. குஷி பேர்வழி .
          அருப்புகோட்டை LIC  யில் இருவரும் ஒரே நாளில் சேர்ந்தோம்.ஒரே அறையில் தங்கினோம். நான்கு  வருடம் கழித்து ஒரே நாளில் காலி செய்தோம்.ஒரே நாளில் பைக் வாங்கினோம் .எட்டு வருடம் கழித்து  ஒன்றாக ஒரே நாளில் கார் வாங்கினோம்...எத்தனை ஒற்றுமை. 
     வளர்ச்சி அதிகாரி வேலையில் கண்ணை கட்டி காட்டில்  விட்டது போல் தெரியாத ஊரில் மாட்டிகொண்டபோது என்னை கையை பிடித்து கூட்டிகொண்டு  சென்று பணியை பற்றி குழந்தைக்கு சொல்லிகொடுப்பதுபோல் அறிவுரை கூறி பணிக்கான இலக்கை நோக்கி அழைத்துசென்று பணி நிரந்தரம் பெற உதவிகள் செய்தார்.நான்கு வருட mansion  வாழ்க்கை....எவ்வளவு அற்புதமான காலம்...
    ஊரில் ஒரு தியேட்டரில் படம் மாத்திரகூடாது. ..அன்னைகே நைட் ஷோ செல்வோம்.மொக்கை படத்தையும் விடாமல் பார்த்துவிட்டு  அடிப்பார்பாருங்க ஒரு கமெண்ட். ...இவனுன்ங்க படத்தை எடுத்துவிட்டு  ரிலீஸ் பண்ணுறதுக்கு முந்தி ஒரு தடவை போட்டு பாக்க மாட்டாங்களா.
தாதா கணேசன் ...பந்தாவை பாருங்க
                              
   எத்தனை  ஊர்களுக்கு சுற்றியிருக்கிறோம் ...எவ்வளவு பேசியிருக்கிறோம் ..
1995 க்கு பிறகு இட மாறுதல் பெற்று ராமேஸ்வரம் சென்று விட்டாலும்  இன்றும் நினைத்தவுடன் போனில் பேச்சும் அடிக்கடி சந்திப்பும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
    எழுதுவதற்கு நிறைய இருக்கிறது....மீண்டும் நிறைய பதிவுகளில் இவரை பற்றி எழுதவேண்டியுள்ளது. 
  இன்றைக்கு பதிவு வெளியிட வேண்டிய அவசியம் ..எது ?
          இன்றைக்கு இவரது பணியிலிருந்து ஒய்வு பெறும் நாள்.......நண்பர்கள் அனைவரும்  ராமேஸ்வரத்தில் சங்கமிக்கிறோம்...எங்களது நட்புக்கு ஒய்வு இல்லை.
        28.2.2011  .         

                                                                                                                        

Sunday, February 27, 2011

கணேசன்

இந்த  குட்டையில் கல்லை தூக்கி போட்டவர்கள் 1---கணேசன்  


                          என்ன தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்ற தலைப்பை நாந்தான் வைத்திருந்தேன். கவிபேரரசு முந்திக்கொண்டு பதிவு செய்துவிட்டார்.
          44  வருட வாழ்க்கையில் எத்தனையோ நண்பர்கள் .ஆனால் முதல் நட்பு எங்கே ஆரம்பித்தது.?.எல்லா காரியத்தையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது மாதிரி  எனது முதல் நண்பன் ஆறுமுகம் பிள்ளை கணேசன் என்ற  A .கணேசன். அவனது நோட்டு புத்தகத்தில்  அவனது பெயரை எப்படி எழுதியிருப்பான் ...அவனது கையெழுத்து இன்னும் மனதில்  அப்படியே ஞாபகம் இருக்கிறது.
                சேரன்மகாதேவியில் எனது தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போது என்னை ஈர்த்தவன் .என்னை சேரன்மகாதேவிக்கு  படிக்க வா என்று அழைப்பு விடுத்து எனக்குள் சில மாற்றத்தையும்,சில திறமைகளையும் உருவாக்கியவன்.என்னை விட இரண்டு வகுப்பு சீனியர். +2  பாடத்திட்டத்தில் முதல் batch .
* சேரை நூலகத்திற்கு அழைத்து சென்று புத்தகங்களை படிக்கவைத்தது.
*அவனது பாடங்களில் உள்ள விஷயங்களை விவரித்து என்னை வியக்க வைத்தது. 
*சிறுவயதில் கபடி ,நீச்சல்  போன்ற அடிப்படை விளையாட்டுகளை அறிமுகபடுத்தியது.
*வைத்யனதசாமி கோயிலில் கதகலட்ஷேபம் ,கச்சேரி ,அரசியல் கட்சி கூட்டங்கள் போன்றவற்றிற்கு அழைத்து சென்று கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது.
           சேரை வைத்யனாதசாமி  கோயில் தெருவில் கண்ணன்,ஞானவேல்,கனகரெங்கண் என்ற ரவி,உலகநாதன்,சங்கர் ,சங்கரலிங்கம், பக்கிர்  போன்ற பெரிய நண்பர் குழுவையே ஒருங்கிணைத்து பெரிய நண்பர் வட்டாரத்தில் என்னையும் இணைத்தவன்.
   B sc .(maths ) ம.தி.தா இந்து கல்லூரியில் படித்தான்.படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பதற்குள் காதல் திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.2003 ல் அதே தெருவில் சந்தித்தேன்.   தாழையூத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் இருப்பதாக சொன்னான்.எனது மனைவியிடம் எனது முதல் நண்பன் என்று அறிமுகப்படுத்தினேன்.
        நிர்வாகம் (management ) பற்றிய கல்வியில் synergy  என்ற சொல் உண்டு.அதாவது  ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு கிடையாது.இரண்டுக்கு மேலோ அல்லது கீழோ தான் இருக்கும்.அதுபோல நண்பனுடன் பழகும்போது அவனை உருவாக்கவேண்டும் ;அல்லது அவனை அழிக்கவேண்டும்.இல்லையேல் அதுவெறும் ரயில் சிநேகிதம்  மட்டுமே.