Tuesday, October 5, 2010

ஆரம்பம்...... ஆரம்பப் பள்ளி

நான் கல்லூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளியில் ஒன்று முதல் நான்கு வரை படித்தேன். ஒரு சரஸ்வதி பூஜையன்று என்னை பள்ளியில் சேர்த்தார்கள். கோடகநல்லூர் ஆசிரியர் சுந்தரம் ஐயர் ஓலைச்சுவடி ஒன்றை கையில் எடுத்து ஒரு பெஞ்சில் என்னை அருகில் வைத்து கொண்டு அவர் சொல்லச் சொல்ல நான் சொன்ன காட்சி இன்னும் என் மனதில் இருக்கிறது.

அந்த பள்ளியில் படித்ததை தவிர எனது திறமைகளை ( ? ) வளர்த்து கொண்டதாக எனக்கு  ஞாபகம் இல்லை. காலையில் பள்ளிக்கு முதலில் யார் வருவது என்ற போட்டி இரண்டு மூன்று பேரிடம் இருக்கும். நான் முதலில் பள்ளிக்கு சென்று விட்டால் அடுத்தவர் வரும் வரை தனியாக இருக்க எனக்கு பயமாக இருக்கும்.

எனது வகுப்பு தோழர்கள் சேதுராமன், பூமிநாதன், மனகாவலம், ராசமணி, ஜான் போஸ்கோ பீட்டர், சிலோன் நடராஜன், பாலையா, முருகேசன், ராமசாமி, ...... ...... ...... ......
இவர்கள் நினைவுக்கு வருபவர்கள்

ராமசாமியை ஊருக்கு செல்லும்போது பார்ப்பேன். மாடு பத்திக்கொண்டு செல்வான். காரில் செல்லும்போதும் நிறுத்திப் பேசுவேன். "என்ன அசோக்கு எப்படி இருக்கே?" என்று வாஞ்சையுடன் கேட்பான். பாலையாவும் (ஒருமுறை அவன் பொங்கல் வாழ்த்து தபால் பெட்டியில் போட்டுவிட்டு போனவுடன் நானும் கணேசனும் பெட்டிக்குள் குச்சி விட்டு எடுத்துப் பார்த்தோம். முகவரியில் முருகன் மாமா என்று எழுதியிருந்தான்) பார்த்தால் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பான்.

'இப்போது எங்கள் வாழ்க்கையில் தான் என்னே வித்தியாசம்! எங்கே வேறுபட்டோம்?' என்று யோசிப்பேன். நாம் கரைசேர்ந்து விட்டோம் என்ற லேசான கர்வமும் அவர்கள் மீதான பரிவும் எழும் .
            இவர்களில் மூவரைத் தவிர மற்ற எல்லோரையும் பார்த்து  30 வருடங்களுக்கு
 மேலாகிறது.சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் நம்பிக்கையும் மனதில் இருக்கிறது.

  Old friends are Gold.
  New friends are Diamond!
  If you get a Diamond,
  Don’t forget the Gold!
  Because to hold a Diamond, you always
  Need a base of Gold
  

3 comments:

  1. கல்லூரிலிருந்து கல்லூரிக்கு வந்த முதல் கல்லூர்வாசி எங்கள் கல்லூர்காரன்.

    வாத்தியார் மகன் என்ற வந்தனங்கள் இன்னும் கல்லூர்வாசிகள் மனம் முழுவதும் மந்திரமாய் ஒலிப்பதின் காரணம் இந்த இடுகை மூலம் இனிதே விளங்குகிறது. நண்பா!

    ReplyDelete
  2. மாடு மேய்கிற ராமசாமி யை குட சஞ்சய் ராமசாமி ரேஞ்சுக்கு பிரபலபடுத்திய நீங்கள் தான் உண்மையான
    நன்பேன்டா


    விசாக்

    ReplyDelete
  3. கல்லூர் கிழக்கே போகும் ரயிலை பற்றி கொஞ்சம் எழுதலாமே
    விசாக்

    ReplyDelete