கல்லூர் ரயில்வே ஸ்டேஷன்
புத்தருக்கு ஞானோதயம் ஒரு போதி மரத்தின் அடியில் தான் கிடைத்தது என்பது வரலாறு.எனக்கு கிடைத்தது ரயில்வே ஸ்டேஷன். இயக்குனர் சரணின் ஒவ்வொரு படத்திலும் ஒரு back drop இருக்கும் .காதல் மன்னன் படத்தில் ஒரு mansion ,அமர்க்களம் படத்தில் ஒரு தியேட்டர் .அல்லி அர்ஜுனாவில் ஒரு பழைய போலீஸ் ஸ்டேஷன்.அது மாதிரி எனது வாழ்க்கையில் backdrop மேலகல்லூர் ரயில்வே ஸ்டேஷன் தான்.
ரயிலை விட்டு இறங்கியதும் முதல் வீடு எங்கள் வீடுதான். சிறு வயது முதல் எல்லா ரயிலையும் வேடிக்கை பார்க்க ஸ்டேஷன் க்கு போய்விடுவேன்.திருநெல்வேலி யிலுருந்து செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில்தான் இந்த ஸ்டேஷன் உள்ளது.நானும் எனது நண்பர்களும் ட்ரெயின் வருவதற்கு முதல் மணி (பிளாக் ஆயிருச்சு என்று சொல்வார்கள் )அடித்தவுடனே ஸ்டேஷன் ல் இருப்போம்.ட்ரெயின் கடந்து கண்ணை விட்டு மறைந்தபின் தான் வீடு திரும்புவோம்.
அந்த ஸ்டேஷன் ல் வேலை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர்,gate keeper ,சிக்னல் man ,gang man அனைவரும் நல்ல அறிமுகம்.ரயிலில் டிரைவர் ஆகவோ அல்லது guard ஆகவோ ஆகவேண்டும் என்ற இலட்சியம் எல்லாம் இருந்தது.அங்கு வேலை பார்ப்பவர்களின் அன்றாட பணிகளை கூர்ந்து கவனிப்பேன்.ஒரு ரயில் வருவதென்றால் மாஸ்டர் அடுத்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் போனில் என்ன பேசுகிறார்.சிக்னல் man க்கு கொடுக்கும் கட்டளை ,அதற்குரிய machine ல் token எடுப்பது அதை வளையத்தில் மாட்டுவது அனைத்தும் அத்துப்படி.
பிளஸ் one முதல் நண்பர்கள் வெங்கிடு,கணேசன் ,விசு,செந்தில் ,கணக்கன் மாரி,வீரமணி ,ஈஸ்வரன் ,ஐயப்பன் அண்ணன் ஆகியோருடன் சேர்ந்து படிப்பது ஸ்டேஷன் ல் தான் ,நண்பர்களுடன் அரசியல்,இலக்கியம் ,சினிமா என்று எல்லா விஷயங்களையும் விவாதிப்போம்.நாங்கள் மட்டும் அல்ல.. எங்களுக்கு வயதில் மூத்தோரும் உட்கார்ந்து பேசுவார்கள்.நிறைய விஷயங்கள்...அனுபவங்கள்...
வீதியில் ராஜாவையும் அவரது அரண்மனையும் வேடிக்கை பார்த்தவனுக்கு எதிர்பாராதவிதமாக அரண்மனையும், ராஜாவின் பதவியும் கிடைத்த மாதிரி எங்கள் வாழ்விலும் திடீரென்று ஒரு நாள் நடந்தது..இப்போது சில நண்பர்களிடம் சொன்னால் கூட ..டேய் கதை விடாதே ... என்பார்கள்.
ஸ்டேஷன் ல் வருமானம் இல்லை என்று தனியாரிடம் ஒப்படைக்க (privatisation ) ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.எங்கள் ஊரை சேர்ந்த வருக்கே அந்த contract கிடைத்தது.அவர் முழு நேர விவசாயி.ஊர்ல படிக்கின்ற பசங்க ஸ்டேஷன் ஐ நல்ல கவனிப்பாங்க..அவங்களுக்கும் படிக்க இடமும் கொடுத்தமாதிரியும் இருக்கும் .. என்று எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்...அப்புறம் என்ன..ஸ்டேஷன் ல் டிக்கெட் கொடுப்பதில் இருந்து ரயிலுக்கு கொடி காட்டுவது வரை எங்கள் வேலைதான்...
![]() |
கைலி கட்டிட்டு ரயிலுக்கு கொடி காட்டுவதை எங்காவது பாத்திருக்கேளா ?..பக்கத்தில் நிற்ப்பது என் தம்பி ராசு என்ற குட்டி |
![]() |
கணக்கன் மாரிக்கு டிக்கெட் கொடுக்கிறேன் |
![]() |
அன்று |
![]() |
இன்று |
![]() |
இன்று....டிக்கெட் கவுன்ட்டர் |
![]() |
முள்ளும் செடியும் மண்டி பொலிவிழந்த நிலையில் |
சூப்பர் ஆனால் இன்னும் நிறைய விஷயங்கள் மற்றும் நினைவுகள் பதிவு ஏற்றம் செய்ய கோரிக்கை விடுகிறான் இளங்கோ
ReplyDeleteசரி ..குட்டி .தொடரும் என்று பதிவில் போட்டுவிடுவோம்
ReplyDeleteEveryone has got some feelings but only very few translate expressions in to words / record & share with others. You are gifted among those few people.... great.
ReplyDeleteGreat ASOKAN... Simply superb.. ( I remember you hadn't shared this during our "get togethers"...
ReplyDeleteகல்லூர் ரயில் நிலையம் ....என் வாழ்வில் ஒரு கலங்கரை விளக்கம்!
ReplyDeleteஆம்..கல்லூரியில் மண் வேதியியல் தேர்வில் நான் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்து மனம் உடைந்து போனேன். தேர்வில் முதல் தோவி என்பதால் தாக்கம் அதிகம். கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை. அனைத்து அறை பறவைகளும் தத்தம் ஊரை நோக்கி பயணிக்க நான் மட்டும் அறைக்குள் முடங்கினேன். வந்தார் அசோகன்(ர்). என்னடா கிளம்பலையா? என்றார்.தேர்வில் மீண்டும் தேறும் வரை பெற்றோரையும் பிறந்த ஊரையும் பார்க்க போவதில்லை என்றேன். எவ்வளவோ சொல்லிபா
ர்த்தார். கேட்கவில்லை. சரி!என் ஊருக்கு வா! அந்த பெற்றோரையாவது வந்து பார்! என்றார். அரைமனதுடன் சென்றேன் அவருடன். பெற்றால்தான் பிள்ளையா? உடன்பிறந்தால்தான் சகோதரியா? களங்கமில்லா தாமிரபரணியில் தினமும் குளியல்.. அன்பு கலந்த உபசரிப்பு. பின்னர் கல்லூர் ரயில் நிலைய வாசம்...எப்போதோ வந்து செல்லும் ரயில் வண்டிகள் வந்து போக அங்கே நான் சந்தித்த மண்வாசனை கலந்த மக்கள்..வாஞ்சையாக பழகிய கிராமத்து நண்பர்கள்..யதார்த்தமான மனிதர்கள்...4 நாட்களில் என்னுள் எத்தனை மாற்றங்கள்..கல்லூரி தேர்வெல்லாம் தேர்வல்ல..மானுடத்தை- மக்கள் அன்பை வெல்வதிலேயே வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது என்று தெளிந்த மனிதனாய் கல்லூரி திரும்பினேன்.. மீண்டும் கிடைக்குமா அந்த நாட்கள் ?
புத்தனுக்கு ஒரு போதிமரம்.!
சாம்ராட் அசோகனுக்கு ஒரு கலிங்கபோர் ! விவேகானந்தருக்கு ஒரு கடற் பாறை..! அப்துல் கலாமுக்கு மாணவர்களுடன் ஒரு சந்திப்பு! வாஜ்பாயிக்கு குமரகோம் பயணம்! ரஜினிக்கு இமயமலை பயணம்! இளையராஜாவுக்கு ஒரு கிரிவலம்! வைரமுத்துக்கு திருவிக பூங்கா! ஷங்கருக்கு குடும்பத்துடன் ஒரு வெளி நாட்டு
பயணம்! கலைஞருக்கு ஒரு பாராட்டுவிழா! முத்துகுமரனுக்கு ஒரு புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புவது.. அசோகனுக்கு சனிக்கிழமை மாலை அருப்புக்கோட்டை விடுதி நண்பர்களுடன் ஒரு சந்திப்பு! அடியேனுக்கு மீண்டும் ஒரு பயணம் கல்லூர் ரயில் நிலையத்திற்கு! அனுமதிப்பாரா மம்தாவின் வாரிசு திருவேதி?
.
நல்ல பதிவு
ReplyDeleteஒவ்வொரு பயலுக்கும்
ஒவ்வொருஇடம்
மனம் விட்டு nanbargaludan பேச ஒரு இடம்
உங்கள் ஊர் புகை வண்டி நிலையமும் ரயிலும் நின்று போகலாம்
உங்கள் ப்ளாக் பயணம் தொடரட்டும்
வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காந்தி சிலை போட்டோ ஒன்னை போடவும்
--
hellow anna arasu how are you? i am eswaran madurai
ReplyDelete