Wednesday, September 21, 2011

பார்த்ததில் ரசித்தது

     THE    ROAD  HOME 

            கடந்த வாரம் மதுரை புத்தக திருவிழாவிற்கு சென்ற போது சில வருடங்களாக தேடி கிடைக்காத உலக சினிமாக்களின் பட்டியலில் உள்ள படங்களின் DVD   சிலவற்றை  வாங்கிவந்தேன்.
                        
                           தி ரோடு ஹோம்-- zhang  yimou  இயக்கி 1999 ல் வெளிவந்த சீன மொழி திரைப்படம்.தந்தையின் மரண செய்தி கேட்டு சொந்த கிராமத்திற்கு செல்லும் மகன் சொல்லுவதாக துவங்குகிறது.தனது பெற்றோரின் கண்ணியமான காதலையும்,அவர்களின் வாலிப பருவத்தையும் மகன் மூலமாக நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர்.
                             
                         கம்யூனிச நாடான  சீனாவில் உள்ள பள்ளிக்கூடமே இல்லாத ஒரு கிராமத்தில் கிராமத்தினரே பள்ளியை கட்டி ,புதிய ஆசிரியராக shangyu  வை அழைத்து வருகின்றனர்.அக்கிராமத்தை சேர்ந்த shavo  என்ற இளம்பெண்  ஆசிரியரை பார்த்த முதல் பார்வையிலே காதல் வயப்படுகிறாள்.அந்த ஊருக்குள் வரும் அந்த மலைப்பாதையின்   காலை  வேளையின்  பசுமையையும்  ,மாலைநேர மஞ்சள் வெயில் படர்ந்த அழகையும்,பனிபெய்யும் போது  உள்ள குளுமையும் ,அதனால்   கருகும் செடி  கொடிகளையும் அவளது காதலில் ஏற்படும் மகிழ்ச்சி,ஏமாற்றம் ,துக்கம் போன்ற அனைத்து உணர்ச்சிகுவியலுக்கும் பின்னணியாக  காண்பிப்பதை பார்க்கும்போது நாம் முழுமையாக திரைப்படத்தில் ஆழ்ந்து விடுகிறோம்
                                                 .
                                 படத்தில் சில காட்சிகளை சேரனின் தவமாய் தவமிருந்து படத்திலும் மற்றும் சசியின் 'பூ ' படத்திலும் பார்த்திருக்கலாம்.காட்சிகள் சுடப்பட்டன  என்பதைவிட inspiration ல் தழுவப்பட்டது என நாகரிகமாக எடுத்துகொள்ளலாம்.
         நினைவுகள் என்றென்றும் பசுமையானது என்பதை குறிக்கும் விதமாக flashback  காட்சிகள் வண்ணத்திலும்,நிகழ்காலம் கருப்பு வெள்ளையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
          படத்தின் முக்கிய செய்திக்கு வருவோம்.இறந்த தந்தையின் உடல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையிலிரிந்து கிராமத்தில் உள்ள மயானத்திற்கு வாகனத்தின் மூலம் கொண்டு வரலாம் என்ற உறவினர்களின் யோசனையை வயதான தாய் மறுக்கிறாள்.கிராமத்திற்கு வரும் அந்த மலைப்பாதை எங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சம்.இறந்த தனது கணவரை அந்த வழியில் தூக்கிக்கொண்டு வரும் போதுதான் அவருக்கு அந்த நினைவுகள் மறக்காமல் இருக்கும்.இறுதி அஞ்சலியாக இருக்க முடியும் என்று வாதம் செய்கிறாள்.உறவினர்களோ , இளைஞர்கள் எல்லோரும் வேலை தேடி வெளியூர் சென்று விட்டனர்.கிராமத்தில் தற்போது முதியோரும்,பெண்களும் ,குழந்தைகளும் மட்டுமே உள்ளனர்.   தூக்கி வருவது  தற்போது உள்ள சூழ்நிலையில்  சாத்தியமில்லை என விவாதிக்கின்றனர்.அதற்க்கான தீர்வை மகன் செய்வதாக திரைப்படம்  தெரிவிக்கிறது.

                 சிறுவயதில் எங்கள்  பகுதியில் இறப்பவர்களை தாமிரபரணி கரையில்   உள்ள மயானத்திற்கு  பாடையில் தூக்கி செல்வர்.தூக்கி செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அந்த கால இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.தூக்கிசெல்லும்போது இவர்களது பாவங்கள் இறந்தவரோடு போய்விடும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
        கடந்த மாதம் ஊருக்கு செல்லும் போது அந்த கால இளைஞர்களில் ஒருவரான     ஐயம் பெருமாள் கோனார் மகன் சங்கரலிங்கம் அண்ணனை சந்தித்தேன். தற்போது பக்கவாதம் வந்து என்னிடம்  கையை ஆட்டி ஏதோ  பேச முயல்கிறார்.தனது இயலாமையை லேசான கண்ணீருடன் வெளிப்படுத்துகிறார் .எனக்கு புரியவில்லை என்றாலும் ,அந்த காலத்தில்  கோடகநல்லூர் செல்லும் பாதையில்      பாடையின் ஒரு கம்பை கம்பீரமாக சுமந்துகொண்டு நடந்து சென்றதுதான் எனக்கு நினைவு வந்தது.
கோடகநல்லூர் சாலை 
                                 
                1996  ல் சேரன்மகாதேவியில் எனது ஆச்சி இறந்தபோது  பாடையை நானும்  ,தம்பி கண்ணன்,எனது நண்பர்கள்  இசக்கிபாண்டி,கிருஷ்ணமூர்த்தி யோடு   தூக்கிகொண்டு சென்றபோது அந்த அனுபவத்தை வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை உணர்ந்து இருக்கிறேன்.
                                    தற்போதுள்ள  நாகரிக சூழலில் ,கிராமத்தில் கூட இறந்தவர்களை    தூக்கி செல்லும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.மாற்றாக தேர் ஒன்று செய்து கயிறு கட்டி இழுத்து செல்வதோ அல்லது   தள்ளிக்கொண்டு செல்வது மாதிரி ஏற்படுத்தி விட்டனர். எல்லா சாதியினரையும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் தூக்கி கொண்டு சென்ற கல்லூரில் , இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகம் வசிக்கும் ஒரு சாதியினர் அவர்கள் சமுதாயத்திற்கென்று தனியாக தேர் ஒன்று செய்து விட்டனர்.இதனால் மற்ற  சமுதாயத்தினர் ஒன்று கூடி பொதுவாக ஒரு தேர் ஒன்று செய்ய வேண்டும் என்று முடிவு செய்து , எட்டு பேர் மட்டும்  செலவை ஏற்க்க வேண்டும் என்று முடிவு செய்து  அதில் ஒருவராக என்னை அழைத்ததை மிகப்பெரிய பேறாக நினைத்து எனது பங்கு தொகையை வழங்கியது எனக்கு பெரிய மன நிம்மதியை  அளித்தது.                                     
                     தற்போது அருப்புகோட்டையில் சொந்த வீடு கட்டி குடியிருப்பதால்  தெரிந்தவர்கள்   என்ன   அருப்புகோட்டையிலே  settle  ஆகி விட்டீர்களா என்று கேட்பார்கள்?.அதை மறுத்து  "சங்கு ஊதுவதற்கு எங்க ஊருக்கு போய்விடுவேன் " என்று வேடிக்கையாக சொல்வேன்.... ....எங்கள் ஊர் வருங்கால இளைஞர்களை எதிர்பார்க்காமல் எனக்கென்று ஒரு வாகனம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் .........            

4 comments:

  1. என்ன ஒரு எழுத்து அசோகன்,
    உன் எழுத்தில் பாலகுமாரனையும், சொல்லும் லாவகத்தில் இயக்குனர் பாலாவையும் பார்க்கிறேன் கல்லுரா!

    ReplyDelete
  2. காடு வா வா என்கிறது
    வீடு போ போ என்கிறது
    வயசு நாப்பத தண்டிட்ட்ய இல்ல
    இப்படித்தான் தத்துவம் எழுதோணும்
    எழுத தோணும்
    நல்ல முதிர் நடை
    வளரட்டும் உங்கள் பாதை

    ReplyDelete
  3. சமரசம் உலாவும் இடம் நோக்கி செல்வது பற்றி இவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருப்பது -ஏதோ மகேந்திரன் படம் பார்ப்பது போலவும் , இளையராஜாவின் பிண்ணனி இசை இழையோடுவது போலவும்-அவ்வளவு அருமை!
    உங்கள் ஊருக்கு இதைதவிர வேறு என்னவெல்லாம் செய்ய உத்தேசம்?

    ReplyDelete
  4. kalakitinga daddy!!!!!!!!!1

    ReplyDelete