கடந்த மாதம் ஒரு நாள் காலையில் நடை பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியபோது அருப்புகோட்டை அகம்படியர் complex ல் தங்கியிருந்தபோது அடிக்கடி சந்தித்த ஆசிரியரை பார்த்தேன் .என்ன தம்பி எப்படி இருக்கிறீர்கள் ..நண்பர்கள் எங்கிருக்கிறார்கள் ..சந்திப்பது உண்டா என்று கேட்டார் .நண்பர்கள் எல்லோரும் தொடர்பில் தான் உள்ளனர்.போன் மூலமும் வாய்ப்பு கிடைத்தால் நேரிலும் சந்திக்கிறோம் .அவர்கள் இருக்கும் இடத்தை பற்றியும் தெரிவித்தேன்.அதை கேட்டு சந்தோசப்பட்ட அவர் நாசரை ரொம்ப விசாரித்தேன் என்று சொல்லுங்கள் என்று கூறிய அவர் முன்பு நாசர் செய்த மிகப்பெரிய உதவியையும் அதற்கு நன்றி கடன்பட்டிருப்பதையும் சொன்னார்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவனுக்கு திருமண நாள் .வாழ்த்து கூற மொபைலில் அழைத்த போது போனை அவன் எடுக்கவில்லை .நம்பரை மாற்றி விட்டானோ என்ற சந்தேகமும் எழுந்தது .மாலையில் நண்பன் செல்வாவை சந்தித்தபோது கேட்டேன் .அவனும் ஆமாம் .நம்பரை மாத்தி விட்டான் என்று கூறி வேறு ஒரு நம்பரை கொடுத்து இதில் முயற்சி செய் எனக் கூறினான்.நானும் அழைத்தேன் .மறுபக்கம் ஒரு சிறுமியின் குரல். நாசர் இருக்கிறாரா என்று கேட்டேன் .சில வினாடிகள் தயக்கத்திற்கு பிறகு சிறுமி சொன்னாள் ..அவரு ...மூளைக்கு போற நரம்பு வெடிச்சு செத்து போயிட்டார் ..
நாசர் ... டேய் ...நாசர் ...நாசகார சக்தி என்று தான் நண்பர்கள் அன்புடன் அவனை அழைப்போம் ..
1992 ல் அருப்புகோட்டையில் ஒரு பிரபல தினசரி நாளிதழின் நிருபராக ஒட்டன்சத்திரம் என்ற ஊரில் இருந்து வந்தான்.பக்கத்துக்கு அறையில் தங்கியிருந்த polytechnic மாணவர்களிடம் எங்களது அலுவலக ஊழியர் ஒருவருக்கு தங்க இடம் கேட்டு அவர்களை சம்மதிக்க வைத்து மாலையில் வருவார் என்ற தகவலையும் சொல்லியிருந்தோம்.தவறுதலான அறிமுகத்தில் நுழைந்த நாசர் அறையை ஆக்கிரமித்து கொண்டு எங்கள் விரோத பார்வையில் விழுந்த அவன் மிகச் சீக்கிரத்தில் அங்கிருந்த 11 அறைகளில் உள்ள அனைவரது மனதையும் ஆக்கிரமித்த சர்வாதிகாரி.. அவன் ..புன்னகையும் ஒரு வணக்கமும் மட்டுமே பரிமாறி கொண்ட அனைவரையும் ஒரு அழகான மாலையாக தொடுத்தவன் ...
நாசர் ...அஞ்சு அடி உயரம் இருப்பானா ?..சந்தேகம் தான் ...ஆனால் ஆளுமை திறனில் எங்கள் அனைவரையும் விட அஞ்சு மடங்கு உயர்ந்தவன்.
எதை நினைவு கூற ?......எதை சொல்லி அழ ?
*அருப்புகோட்டை complex நண்பர்கள் என்ற நிரந்தர நட்பு வட்டத்தில் நான் , ,கணேசன் சார் ,S S ,நடேஷ் ,சிவக்குமார் ,மூர்த்தி ,சேகர் ,ராஜா ,இயற்கை இரவி .RI வேல்முருகன், மோகன் நைனா ,இளமாறன் ,சீனி ,ரவி எல்லோரையும் இணைத்து 1992 முதல் இன்று வரை ஒன்றாக பயணிக்க செய்ததின் முழு முதல் பிள்ளையார் சுழியே நாசர் தான் ...
![]() | |||
உட்கார்ந்திருப்பவர்கள் : இளமாறன் ,சிவகுமார்,நான்,நடேஷ் ,வாட்ச்மேன் குருசாமி தேவர் | நிற்பவர்கள் .ரவி கணேசன் சார்,SS .மூர்த்தி மோகன் நைனா ,நாசர் |
![]() |
blue shirt ...நாசர் |
![]() |
கொடைக்கானல் டான்ஸ் ...சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது... |
*எனது பணி நிரந்தரத்திற்க்கு தேவையான வணிக இலக்கிற்க்கான போராட்டத்தில் உனது பங்களிப்பு நெஞ்சை விட்டு அகலாதது
*1993ல் நமது அரசியல் ஆசான் வைகோ தனிக்கட்சி தொடங்கபோகிறார் என்ற பரபரப்பான சூழலில் அதற்க்கான முதல் கூட்டம் நரிக்குடியில் நடந்த பொது நீ செய்தி சேகரிக்க வும் வைகோவின் உரையை கேட்க்கும் ஆவலுடன் நானும் எனது பைக்கில் குண்டும் குழியும் ஆன ரோட்டில் 30 கிலோமீட்டர் பயணம் செய்து இரவு 2 மணிக்கு திரும்பியது...
*என்னை மாப்பிளை பார்க்க வரும் நாட்களில் ஒரு கையால் சிகரெட் பிடித்துக்கொண்டு மறு கையில் dye brush ஆல் எனது தலை முடிக்கு touch up செய்வாயே ..
![]() |
எனது திருமணத்தில் ...சிவாவுடன் நாசர் |
*எனது தம்பிக்கு மறுநாள் MIT ல் admission ..முந்தைய நாள் TC வாங்கியாக வேண்டும் .அப்போது எங்கள் இருவரையும் மதுரை பல்கலை கழகத்திற்கு அழைத்து சென்று அதிரடியாக ஊடுருவி சில விளையாட்டு நடத்தி TC வாங்கும் போது அந்த superintendent இந்த அலுவலகத்தில் ஒரே நாளில் வாங்கிய நபர் நீங்களாக தான் இருப்பீர்கள் என்று வியப்புடனும் வெறுப்புடனும் கொடுத்தது இன்றும் கண்ணுக்குள்ளே இருக்கிறது .
*நான் ஊருக்கு சென்ற நாட்களில் எனது நண்பர்கள் செல்வா ,முருகேசன் மற்றும் எனது மைத்துனன் கண்ணன் எல்லோரையும் உடன் பிறந்தவர்களாக கவனித்து கொண்டாயே ..
![]() |
தம்பி கண்ணன் ,மைத்துனன் கார்த்தி ,கண்ணன் ,நடேஷ் உடன் நாசர் |
*திண்டுக்கல் இன்ஜினியரிங் கல்லூரியில் எனது மைத்துனன் கண்ணனை எவ்வளவு பொறுப்பாக admission லும் தொடர் கவனிப்பு கண்காணிப்பு ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தான் ...அதற்கு நன்றிக்கடனாக கண்ணன் வீடு கிரகபிரவேசத்தில் நாசருக்கு முக்கிய வரவேற்பு கொடுத்து கௌரவித்தான் ....
எதை நினைவு கூற ?......எதை சொல்லி அழ ?
எத்தனை நண்பர்கள் இருந்தும் ....எத்தனை விசுவாசிகள் இருந்தும் எல்லோரையும் தவிக்க விட்டு விட்டு மறைந்து போனான் .
மரண செய்தி எங்களுக்கு தாமதமாக கிடைத்ததற்கு குடும்ப உறுப்பினர்களின் சூழ்நிலையும் தகவல் தொடர்பு பிரச்னை யும் காரணமாக இருந்தன. அதை பொருட்படுத்தாது நான்,கணேசன் சார் , SS ,மூர்த்தி ,நடேஷ் ,சிவக்குமார் ,செல்வா , முத்துக்குமரன் எல்லோரும் ஒட்டன்சத்திரம் சென்று நாசர் வீட்டில் உள்ளோருக்கு ஆறுதல் சொன்னோம்.தங்க விக்ரகம் போல் மகள்..நாசருக்கு மட்டும் அல்ல...எங்கள் அனைவருக்கும் தான் ..பரிவான வார்த்தைகளும் நிதிஉதவியும் செய்தாலும் மனது அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது.நாசர் கடமையை நாங்கள் இருந்து செய்கிறோம் என்று ஆறுதல் சொன்னாலும் மகனை இழந்த அந்த தாய் அழுது கொண்டே சொன்னார்கள்
எத்தனை பேர் வந்து ஆறுதல் சொன்னாலும் நான் பெத்த பிள்ளை மாதிரி வருமா ?
உங்கள் SMS-ஐ காலையில் பார்த்தவுடன் சரி, வழக்கம் போல் அசோகன் எதாவது உலக சினிமாவை பற்றியோ அல்லது நண்பர்களுடன் அடித்த லூட்டியையோ தான் எழுதி இருப்பார் என்று நினைத்து அதனை ஒதுக்கி வைத்தேன். மதிய உணவினை முடித்து விட்டு உண்ட மயக்கத்துடன் கல்லூரனை திறந்தேன்.
ReplyDeleteபடித்தேன். பார்த்தேன். பார்த்துக் கொண்டே இருந்தேன்.கணணி திரையும் கலங்கியது.
தெனாவட்டனா பார்வையுடன் நீல நிற சட்டையில் சிலோன் ஸ்டுடியோவில் நாசர் நிற்பது கண்முன்னே நின்றது.
குறுந்தகவலில், Any corrections என்றிர்கள். எதை விடுவது... எதை சொல்வது.... அழுவதை தவிர வேறொன்றும் ........ வலி மனதில் மட்டுமல்ல உடம்பிலும் மெல்ல ஆரம்பித்தது.
குறிப்பு: நாசகாரனின் நினைவில் நானும் உங்களை மாதிரி கிறுக்க ஆரம்பித்துவிட்டேன். மன்னிக்கவும்.
நடேஷ்...